28 காரிகைகளையுடைய சந்திப்படலமாகிய வீரசோழிய எழுத்ததிகாரத்துள்,தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்கள், அவற்றின் பிறப்பு, மொழி முதல்ஈறு இடை யெழுத்துக்கள், சந்தியில் இயல்புபுணர்ச்சி விகாரப்புணர்ச்சி,வடமொழியில் நகர உபசர்க்கமாகிய எதிர்மறைச்சொற்புணர்ச்சி, வடமொழி யில்தத்திதப் பெயர்ப்புணர்ச்சி, தமிழில் இயல்பு விகாரப் புணர்ச்சிகள்,சிறப்பாக ழகரம் ளகரம்போல் புணர்ச்சிக்கண் அமையும் தன்மை, நகரம்ஞகரமாகத் திரியும் இடங்கள்- முதலியவை இடம் பெறுகின்றன.