வீமன்

பாண்டுவினது இரண்டாம் புத்திரன். வாயுவினது அனுக்கிர கத்தினாற் பிறந்தவன். இவன் மல்யுத்தத்தினும், புஜபலத்தினும், கதாயுதப்போரினும் தனக்கிணையில்லாதவன். ஜராசந்தனை வென்றவனும் திரௌபதியைக் கவர்ந்து சென்றஜயத்திரதனை வென்றவனும், விராடனிடத்திலே மடைப்பள்ளிக்கதிபனாக விருந்தவனும், கீசகனைக் கொன்றவனும், துரியோதனனைப் பாரதயுத்தத்திலே கொன்றவனும், இடிம்பனைக் கொன்று அவன்தங்கையை மணம் புரிந்தவனும் இவனே