வீட்டுமன், வீஷ்மன்

கங்கை வயிற்றிலே சந்தனுவுக்குப் பிறந்த புத்திரன். சந்தனு கிழப்பருவத்தை அடைந்தபொழுது அதிரூபவதியாகிய ஒரு கன்னிகையைக்கண்டு அவள் மேற்காதலு டையனாகி அவளுடைய தந்தையாரிடத்தில் தூதனுப்பித் தனக்கு மணம் பேசுவித்தான். அவர்கள் வீஷ்மன் பட்டத்துக்குரிய புத்திரனாயிருத்தலினாலவள் வயிற்றிற் பிறக்கும் புத்திரன் பட்டத்துக்குரியனாகானென மறுத்தார்கள். அதனைக் கேள்வியுற்ற வீஷமன் தந்தையினுடைய அவாவைத் தீர்க்கும் பொருட்டு அக்கன்னிகையினுடைய அவாவைத் தீர்க்கும் பொருட்டு அக்கன்னிகையினுடைய தந்தையாரிடஞ் சென்று தனக்கு அரசுரிமையும், விவாகமும் வேண்டுவதில்லை யெனச்சத்தியஞ் செய்து கொடுத்தான். அவ்வாறே சந்தனு அவளை மணம்புரிந்து, அவள் வயிற்றிற் பிறந்த விசித்திரவீரியனுக்கு அரசுரிமையீந்தான். வீஷ்மன் விசித்திரவீரியனையும் அவன் புத்திரனையும் சத்தியந்தவறாத அன்போடு பாதுகாத்து வந்தான். இவன் பாரதயுத்தத்திலே அர்ச்சுனனுக்குத் தோற்று நெடுங்காலந் தவஞ் செய்திருந்திறந்தான்