திரிமூர்த்திகளுளொருவர். இவர் தொழில் திதி. இவர் உலக பரிபாலனத்தின் பொருட்டு எடுத்த அவதாரங்கள் பத்து, அவை மற்சியம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமன், ராமன், கிருஷ்ணன், புத்தன், கற்கி என்பனவாம். விஷ்ணுவுக்குப் பீதாம்பரன், கருடத்துவசன், சக்கராயுதன், லக்ஷூமிபதி முதலியபல நாமங்களுள. இவருக்கு ஆயுதம் சுதரசனமென்னும் சக்கரம், பாஞ்சசன்னியமென்னுஞ் சங்கு, கௌமோதகி யென்னுந் தண்டு, நந்தகம் என்னும் வாள், சார்ங்கமென்னும் வில்லு என ஐந்தாம். இவருடைய ஆவரணம் கௌஸ்துபம், மார்பிலேயுள்ள மற்சம் சீவற்சம், இவர் பாற்கடலிலே சர்ப்பசயனத்திலே துயில்கொள்வர். நாராயணனே விஷ்ணு வென்றும், நாராணனே நிர்க்குணவடிவென்றும் விஷ்ணு சகுணவடிவென்றும் புராணங்கள் பலபடக்கூறும். நாராயணன் காண்க