விளம்பிய பகுதி வேறாதல்

136ஆம் சூத்திரத்துச் சொல்லப்பட்ட எனைவகைப் பகுதி யுள்ளும் சிலபொருளான் வேறுபட்டும், சில மிக்கும். சில திரிந்தும், சில ஈறுகெட்டும் நிற்கையும் குற்றமாகா.எ-டு : வா என்னும் பகுதி, வந்தான் – வருகின்றான் – என்புழி,ருகரம் மிக்கும் திரிந்தும் வரும்.கொள் என்னும் பகுதி, கொண்டான் – கோடு – கோடும் – என்புழி,ளகரம், ணகரமாகியும் கெட்டும் ஆதி நீண்டும் வந்தது.வலைச்சி, புலைச்சி – என்றல் தொடக்கத்துப் பெயர்ப் பகுபதம்எல்லாம் வலைமை புலைமை – முதலான பெயர்ப்பகுபதத்து ஈறு கெட்டு ‘இ’ ஏற்றுவந்தன.(நன். 138 மயிலை.)வேறுபடாதது பிரகிருதியாமன்றி வேறுபட்டது பிரகிருதி யாகாதேனும்,தந்தையைக் குறிக்க மகன் எனப்பட்டா னொருவன் தன் மகனைக் குறிக்கத்தந்தையானாற் போலப் பிறவினைப்படுத்த வரும் இவ்விகுதிகளும் (வி, பி.)மேல்வரும் அன் ஆன் முதலிய விகுதிகளைக் குறிக்கப் பகுதியாம் ஆதலின்,‘விதியே’ எனப் புறனடை தந்தார்.இச்சூத்திரத்திற்கு வா என்னும் பகுதி முதலியன வந்தான் -வருகின்றான் – முதலாக விகாரப்படுதலைப் பொருளாகக் கூறுவாருமுளர்.இவ்விகாரங்கள் பகுபத உறுப்பாய் மாட் டெறிந்து கொள்ளப்பட்ட மூன்றுசந்தியுள்ளும் ஒன்பது விகாரத்துள்ளும் அமைந்துகிடத்தலின் அதுபொருந்தாது என்க. (நன். 139 சங்கர.)