திருவிளமர் எனத் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் திருவாரூக்கு அண்மையில் உள்ளது என்பதும், ஓடம் போக்கி ஆற்றுக்குத் தென் கரையில் உள்ள சிறிய கோயில் என்பதும் தெரிகிறது.
அத்தக வடிதொழ அருள் பெறு கண்ணொடுமுமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே (346 -1)
என விளமர் இறைவனைப் பாடுகின்றார் சம்பந்தர். இவ்வூர்ப் பெயர் விளக்கம் புலனாகவில்லை. விளநகர் போன்று தாவரப் பெயரா என்பது நோக்கற்குரியது.