இன்றும் விளநகர் என்றே சுட்டப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.
மொய்த்த காதலில் விளநகர் விடையவர் பாதம்
பத்தர் தம்முடன் பணிந்த நிலையைச் சேக்கிழார் காட்டு
வார் (திருஞான-441). இவ்விளநகர் பற்றி, சம்பந்தர் பாடலும் காணப்படுகிறது.
ஒளிரிளம் பிறை சென்னி மேலுடையார் கோவண வாடையர்
குளிரிளம் மழை தவழ் பொழிற் கோல நீர் மல்கு காவிரி
நளிரிளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார்
மிளிரிளம் பொறியரவினார் மேயது விளநகரத்தே’ என்கின்றார் சம்பந்தர் (214-1). விளா என்பது ஒரு வகை மரம் என்பதை அறியும்போது இம்மரங்களின் மிகுதி காரணமாக இப்பெயர் அமைந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. விழல் நகர் விளநகர் என்றாயிற்று. சுவாமிக்கு உசிரவனேஸ்வரர் என்ற பெயர் உண்டு. உசிரம் விழல், என்ற குறிப்புகள் இப்பெயர் சார்ந்து அமைகின்றன. உசிரம் என்பதற்கு இலாமிச்சை என்ற தாவர வகையைக் குறிப்பிடும் தமிழ் லெக்ஸிகன், எனவே, விளாமரம் அல்லது உசிரம் மரம் காரணமாக இப்பெயர் அமைந் திருக்கிறது என்பது தெரிகிறது.