விளங்கு என்பது சிற்றரத்தை எனப் பொருள் படுகின்றது, தாவரத்தால் விளங்கில் எனப் பெயர் பெற்றிருக்கலாம். அல்லது. மருத்துவ தொடர்புடைய சிற்றரத்தையைக் கொண்டு, மருத்துவ தொடர்பில் பெயர் பெற்றதாகவும் இருக்கலாம். விளங்கிலுக்கு நேர்ந்த விழுமத்தைச் சேரன் மாந்தரஞ் சேரலிரும் பொறை நீக்கினான்.
“மாவண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மை யெழில் உண்கண் கலுழ” (அகம். 81 : 13 14)
“முதிர் வரர் இப்பி முத்தவார் மணல்,
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
களம் கொள் யானை, கடுமான், பொறைய” (புறம். 53: 1 5)