ஸ்ரீவில்லிபுத்தூர் என அழைக்கப்படும் இவ்வூர் இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. திருமால் கோயில் பெருமை பெற்றது. இறைவனது சாபத்தால் வேடனாகப் பிறந்த முனிவர் வில்லி. சகோ தரன் கண்டன் இறக்க, பரந்தாமன் வில்லி யினது கனவில் தோன்றி, இந்தக் காட்டை அழித்து நகரம் ஆக்கு. பாண்டி, சோழநாட்டு அந்தணர்களைக் கொண்டு வந்து குடி யேற்று எனச் சொல்ல, வில்லி காடு திருத்தி நாடாக்கிய நகரம் தான் வில்லிபுத்தூர் என்ற எண்ணம் இப்பெயர்த் தொடர் பானது. பெரியாழ்வாராலும், ஆண்டாளாலும் பாடல் பெற் றது இத்தலம்.
மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய்’ என, பெரியாழ்வார் வில்லிபுத்தூர் இறைவனைப் பாடுகின்றார் (நாலா – 133).
மென்னடை அன்னம் பரந்து விளையாடும்
வில்லி புத்தூருறைவான்றன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என்
பொருகயற் கண்ணிணை துஞ்சா
என்கின்றார் ஆண்டாள் (நாலா-549)’. புத்தூர் என்பது புதுவை எனவும் குறிக்கப்படுகிறது. ஆதியில் இத்தலம் வராகஷேத்திரம் என்ற பெயர் பெற்று இருந்தது என்ற எண்ணமும் உண்டு. மேலும், வில்லி புத்தூர் என்பதனை வில்லியோடு தொடர்பு படுத்தி ஊர்ப்பெயர்கள் காரணம் சுட்டினாலும், நம்பியாண்டர் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் கூறும் செருவிலி புத்தூருக் கும் இதற்கும் தொடர்பு உண்டா என்பதும் நோக்கத் தக்கது.
செருவிலிபுத்தூர்ப் புகழ்த்துணை
வையம் சிறு விலைத்தா
உருவிலி கெட்டுணவின்றி (67)
என புகழ்த்துணை நாயனார் பிறந்த இடமாக செருவிலி புத்தூர் என்ற இடத்தைச் சுட்டுவார். இதனையே சேக்கிழாரும் தமது பெரியபுராணத்தில்,
செருவிலி புத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்
அருவரை வில்லாளி தனக்க கத்தடிமையாம்
பொருவரிய புகழ்நீடு புகழ்த்துணையாரெனும் பெயரார்’
என்கின்றார் (62-1).சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் நூலாசிரி யர், செருவிலி புத்தூருக்கு எழுதும் விளக்கத்தில், இது சோழ நாட்டில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் பாதையில் தற்போது அரிசிற் கரைப் புத்தூர் என்றும், அழகார் புத்தூர் என்றும் அழகாத்ரி புத்தூர் என்றும் வழங்குகிறது என்கின்றார் (பக்.408). இதனை நோக்க, செருவிலி புத்தூரின் தற்போதைய பெயர் அரிசிற்கரைப் புத்தூர் அழகார் புத்தூர் என அமைகிறது. ஆயின் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் எட்டு மைல் தொலைவில் உள்ள அலைக்கும் புனல் சேர் அரிசிற்றென் கரை அழகார் திருப்புத்தூர் அழ கனீரே’ என்பதைப் பற்றித் தேவாரப்பாடல் அமைகிறது. மேலும் சுந்தரர், புகழ்த் துணை நாயனார் இறைவனை வழி பட்டு முத்தி அடைந்த நிலம் இது என்ற கருத்தையுடையவர் என்பதற்கு.
வகுத்தவனுக்கு நித்தற் படியும் வருமென்றொரு
காசினை நின்ற நன்றிப்
புகழ்த் துணை கைப்புக செய்துகந்தீர்
பொழிலார் திருப்புத்தூர் புனிதன் நீரே
என்ற குறிப்பினையும் இவ்வாசிரியர் குறிப்பிடுகின்றார் (பக்.41). இவற்றை நோக்க. செருவிலிபுத்தூர் அழகார் திருப்புத்தூர் என்பதே என்ற எண்ணம் இவரிடம் நிலைத்திருக்கக் காண்கின்றோம். அழகார் புத்தூர் என்ற பெயரும். செருவிலிபுத்தூர் என்ற பெயரும் ஒரே கால கட்டத்தில் பயின்று வந்திருப்பதைக் காண்கின்றோம். ஒரு ஊர்ப்பெயர் பிற பல பெயர்களைகளையும் ஒரே காலத்தில் கொண்டு திகழ்வது வரலாற்று உண்மை னும், அதற்குரிய சான்றுகள் தெளிவாக அமைகின்றன. ஆயின் இங்கு அரிசிற் கரைபுத்தூர் பற்றிய பாடல்கள் உள. சம்பந் தர் அப்பர் சுந்தரர் மூவருமே பாடியுள்ளனர் முத்தூரும் புனன் மொய்யரிசிற் கரைப் புத்தூர்’ என்ற நிலையில் அப்பர் பாடும் தன்மையில் அரிசிலாற்றங்கரையில் உள்ள புத்தூர் என்பதே இதற்கு அடிப்படையாக இருக்க, இதுவும் செருவிலிபுத்தூரும் ஒன்று என்பது முரணாக அமைகிறது. சம்பந்தர் பாடலும் இவ்விதமான எந்த விதக் குறிப்பையும் தரவில்லை. என்ன சுந்தரர், அலைக்கும் புனல் சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத்தூர் அழகாரே என இதற்குச் சிறிது மேலும் அழகு கொடுத்துப் பாடுகின்றார். இவரது பாடல் வருணனையில் பின்னர் அரிசிற் தென்கரைப் புத்தூர், அழகார் திருப்புத்தூர் என்ற வழக்கிலும் தோற்றம் பெற்றிருக்கலாம் என்பது தோன்றுகி தவிர, செருவிலி புத்தூர் என்பது இத்தலமேயாயின், இவர் மூவர் பாடலிலும் அப்பெயர் பற்றிய எந்தவொருக் குறிப்புமே இல்லாமைக்குக் காரணம் என்ற கேள்வி எழுகிறது. மேலும், நம்பியாண்டர் பாடிய பின்னர், சேக்கிழாரும் செவிலி புத்தூர் என்றே உரைக்கின்றார். சுந்தரர் பாடியது புகழ்த்துணை நாயனார் பற்றிய கருத்து என்பதாயின் பொது நிலையில் பாடியிருக்கலாம். புத்தூர் என்ற நிலையில் இரண்டின் பொருத்தமே இரண்டையும் ஒன்றெனக் கருதியதன் காரணம் எனத் தோன்றுகிறது. புத்தூர். அமைதியான குடிவாழ்க்கைக்கு ஏற்றது என்ற நிலையில் இப்பெயர் பெற்று, பின்னர் திருமால் கோயில் கொண்ட நிலையில் புராணக் கருத்துகள் ஏற்பட்டு வில்லி என்ற ஆட்பெயராக மாறியதோ எனவும் எண்ணத் தோன்று