விற்குடி

விற்குடி என, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. சம்பந்தர் விற்குடியில் உள்ள வீரட்டத்து இறைவனைப் பரவுகின்றார்.
விரியுமாமலர்ப் பொய்கை சூழ் மதுமலி விற்குடி வீரட்டம் (244- 3)
பொழில் மல்கிய மலர் விரி விற்குடி வீரட்டம் (244-6)
என்ற எண்ணங்கள் விற்குடி பற்றி அமைகின்றன. விற்குடியில் குடி, குடியிருப்புப் பகுதியைச் சுட்ட, வில்லாளிகள் வாழ்ந்த இடம் என்ற நிலையில் இப்பெயர் அமைந்திருக்கலாமோ என்ற எண்ணம் அமைகிறது.