விருத்தி சந்தி

நிலைப்பத ஈற்று அகரஆகாரங்களில் ஒன்றன்முன், வரும் பத ஏகாரஐகாரங்களில் ஒன்று வந்தால் ஐகாரமும், அவ்விரண் டில் ஒன்றன்முன் ஓகாரஒளகாரங்களில் ஒன்று வந்தால் ஒளகாரமும், முறையே நிலைப்பத ஈறும் வரும்பதமுதலும் ஆகிய உயிர்கள் கெடத் தோன்றுதல் விருத்தி சந்தியாம்.எ-டு : சிவ + ஏகம் = சிவைகம்; சிவ + ஐக்கியம் = சிவைக்கியம்;தரா + ஏகவீரன் = தரைகவீரன்; ஏக + ஏகன் = ஏகைகன். கலச + ஓதனம் =கலசௌதனம்; மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்; கோமள + ஓடதி = கோமளௌடதி;திவ்விய + ஒளடதம் = திவ்வியௌடதம்; மகா + ஓடதி = மகௌடதி; மகா + ஒளடதம்= மகௌடதம்(தொ. வி. 38 உரை)அகரஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்குமுன் ஏகார ஐகாரங்களை முதலிலேயுடையசொல் வரின், நிலைமொழி யிறுதியும் வருமொழி முதலும் கெட்டு ஐகாரம்வரும். அகர ஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்குமுன் ஓகார ஒளகாரங் களைமுதலிலேயுடைய சொல் வரின், நிலைமொழியிறுதியும் வருமொழி முதலும் கெட்டுஒளகாரம் வரும்.வருமாறு : சிவ + ஏகநாதன் = சிவைகநாதன், சிவ + ஐக்கியம் =சிவைக்கியம், மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்;கலச + ஓதனம் = கலசௌதனம், மந்திர + ஒளடதம் = மந்திரௌடதம், (மு.வீ. மொழி. 41, 42)