விரியூர்

விரி என்றால்‌ காட்டுப்புன்னை என்ற ஒருவகை மரத்தைக்‌ குறிக்கும்‌. அவ்வகை மரங்கள்‌ வளர்ந்த பகுதியில்‌ அமைந்த ஊர்‌ விரியூர்‌ எனப்‌ பெயர்‌ பெற்றது போலும்‌.. புறப்பாடல்‌ (332) பாடிய நக்கனார்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ இவ்வூரினர்‌, விரியூர்‌ நக்கனார்‌ எனப்‌ பெயர்‌ பெற்றார்‌.