செய்யுள்விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுளில் ஓசைநலன் கருதி இடையே ஓர்ஒற்று விரிக்கப்படுவது இவ்விகாரம்; பிற எழுத்தும் சாரியையும்விரியினும் ஆம். இவ்விரித்தல் யாப்பு நலனேயன்றித் தொடைநயம் பற்றியும்நிகழும்.எ-டு : ‘சிறியிலை வெதிரின் நெல்விளை யு ம் மே’ – யாப்பு நலன் கருதி மகரம் விரிந்தது.‘தண்துறைவன்’ எனற்பாலது ‘தண்ணந்துறைவன்’ என அம்சாரியைவிரிந்தது.‘மனி த் தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே’ – எதுகைநலம் கருதித்தகரம் விரிந்தது. (நன். 155)