விரிச்சியூர்

நன்னாகனார்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ விரிச்சியூரைச்‌ சேர்ந்தவர்‌. இந்த விரிச்சியூர்‌ நன்னாகனார்‌ பாடிய புறப்பாடல்‌ (புறம்‌ 292) ஒன்று உள்ளது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்‌ வசிக்கும்‌ இடத்திற்குச்‌ சென்று, அவர்கள்‌ தற்செயலாகப்‌ பேசிக்‌ கொள்ளும்‌ பேச்சை நன்னிமித்தமாகக்‌ கொள்ளும்‌ விரிச்சி கேட்டல்‌ என்னும்‌ மரபையொட்டி, விரிச்ச சொல்வதற்குரியோர்‌ வசித்த குடியிருப்பு அமைந்த ஊர்‌ விரிச்சியூர்‌ எனப்‌ பெயர்‌ பெற்றிருக்கலாம்‌.