இரண்டனுருபு, விரவுப்பெயர்க்கண் விரிந்தும் விரிதல் ஒழிந்தும்நிகழும். எல்லா வேற்றுமையும் விரிந்தும் தொக்கும் வருதல் போலாது,இவ்விரண்டாம் வேற்றுமை உயர்திணைப் பெயர்க்கண்ணும்விரவுப்பெயர்க்கண்ணும் விரிதலே தகுதி யாய், தொகுதலே தகுதியாயும்வலிந்துகோடலாயும் வரும் என்பது தோன்ற, ‘விரிந்தும் தொக்கும், விரிந்துநின்றும்’ என்றார். நின்று- ஒழிந்து (விரிதல் ஒழிந்து- என்றவாறு)எ-டு : கொற்றனைக் கொணர்ந்தான் : ஐயுருபு விரிந்து நின்றது(தகுதி)ஆண்பெற்றாள், பெண் பெற்றாள் : ஐயுருபு விரியாது நின்றது (உருபுவிரித்துப் பொருள் செய்தல் வலிந்து கோடல்)தற்கொண்டான், நிற்புறங்காப்ப : (உருபு தொக்கு வந்தமை தகுதியாயிற்று, னகரம் திரிந்தமையின்.(நன். 255 சங்கர.)