கிருஷ்ணத்துவைபாயனர். பராசரர் சத்தியவதியைக் கூடிப் பெற்ற புத்திரர். வேதங்களை வகுத்த காரணத்தால்வியாசர் என்னும் பெயர் பெற்றனர். வேதாந்த சூத்திரஞ் செய்தவரும் மகாபாரதத்தை விநாயகரால் எழுதுவித்தவரும் இவரே. இவர் புத்திரனார்சுகர். இவர் கங்கையின் கண்ணுள்ள தீவிலே பிறந்தமையால் துவைபாயனர் எனப்படுவர். துவீபம்~ தீவு அயனர் ~ அதிற்போந்தவர். இவர் புராணங்களையும் பதினெட்டாக வகுத்தனர். பாண்டு திருதராட்டிரர்களுக்குத் தந்தையுமிவரே