மத்தியந்தினமுனிவர் குமாரர். இவர் பூர்வநாமம் பாலமுனிவர். இவர் சிவபூஜையின் பொருட்டுக் கொய்யும் மலர்கள் பகற்காலத்திலே வண்டால் எச்சிற்படுகின்றனவேயென்று வருந்திச் சிவனிடத்திலே புலிகண்ணும் புலிக்காலும் வேண்டிப் பெற்றுத் தில்லைவனத்திலே இரவிற் சென்று மலர்கொய்துவைத்துப் பகல் எல்லாம் பூசைபுரிபவர். இவர் அதுபற்றியே வியாக்கிரபாதர் என்னும் பெயர் பெற்றார். இவர் சிதம்பரத்திலே கனகசபையிலே சிவபெருமான் செய்கின்ற ஆனந்தத்தாண்டவத்தைப் பிரத்தியடிமாகக் கண்டவர்