வியலூர்

திருவியலூர் என்ற பெயரில் இன்று தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள ஊர் இது. திருவிசநல்லூர், விசலூர் என்பன பிற வழக்குகள்.. சம்பந்தர் இங்குள்ள சிவனைப் பரவியுள்ளார்.
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே
கடையார் தரவகிலார் கழை முத்தந் நிரை சிந்தி (13-3)
மிடையார் பொழில் சூழ் தரு விரிநீர் லியலூரே (13-4)
எனப்பாடும் நிலையில், அகன்ற நீர்ப்பரப்பு பொருந்திய இடம் என்பதைச் சுட்டுகின்றார். வியல் என்பது அகன்ற தன்மையைக் குறிக்கும் நிலையில் பரந்த, விரிந்த அகன்ற ஊரின் இயல்பு காரணமாக வியலூர் என்ற பெயர் அமைந்திருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது.