வியலூர் என்பது செங்குட்டுவனால் வெல்லப்பட்ட தோரூர். வியலூர் எனவும் வழங்கப்பட்டதாகத் தெரிகறது. நன்னன் வேண்மான் என்பவனுக்கு இவ்வூர் உரியது என்று சங்க இலக்கியம் கூறுகிறது. பெருமை பொருந்திய ஊர் என ஊரின் புகழ் கருதி வியலூர் எனப் பெயர் பெற்றதா அல்லது காட்டுப் பகுதியில் அமைந்த ஊர் என்பதால் வியலூர் எனப் பெயா் பெற்றதா என்பது தெரியவில்லை.
“இனம் தெரி பல்லான் கன்றொடு கொண்டு
மாறா வல்வில் இடும்பிற் புறத்திறுத்து
உறுபுலி அன்ன வயவர் வீழ,
இறுகுரல் நெய்தல் வியலூர் நூறி” (பதிற். ஐந்தாம் பத்து பதிகம் 8 11)
“நறவு மகிழிருக்கை நன்னன் வேண்மான்
வயலைவேலி வியலூர் அன்ன” (அகம் 9712 13)
“கறிவளர் சலம்பிற்றுஞ்சும் யானையிற்
சிறுகுர னெய்தல் வியலூர் எறிந்த பின்” (சிலப் 28/114 115)