விசிரவசுவுக்குக் கைகேசியிடத்திலே பிறந்த மூன்றாம் புத்திரன். ராவணன் தம்பி. இவன் சீதையை ராமனிடத்திற் கொண்டு போய் ஒப்புவித்து விடும்படியாகப் பலவாறு போதித்தும் அவன் கேளாமையால் அவனை விடுத்துப் போய் ராமரைச் சரணடைந்தவன். இவனை ராமர் அபயஸ்தம் கொடுத்து ராவணசங்காரதின் பின்னர் இலங்காபதி யாக்கினர். இவன் சிரஞ்சீவி. இவன் பொருட்டாக ஸ்ரீரங்கநாதர் தெற்குமுகமாக அறிதுயில் கொள்ளுகின்றனர் என்பது ஐதிகம்