வினைப்பகுபதம்

நடந்தான், நடக்கின்றான், நடப்பான் – என முக்கால வினை முற்றுப்பகுபதம் வந்தன. நடந்த, நடக்கின்ற, நடக்கும் – என முக்காலப் பெயரெச்சப்பகுபதம் வந்தன. நடந்து, நடக்க, நடக்கின் – என முக்காலவினையெச்சப்பகுபதம் வந்தன. இவையெல்லாம் உடன்பாடு.நடவான், நடவாத, நடவாது- இவை எதிர்மறை. இவை முறையே வினைமுற்றும்பெயரெச்ச வினையெச்சங்களும் ஆகிய தெரிநிலை வினைப்பகுபதங்கள்.பொன்னன், அகத்தன், ஆதிரையன், கரியன், கண்ணன், ஊணன், அற்று,இற்று,எற்று – என இவை குறிப்பு வினை முற்று. கரிய, பெரிய – என இவைகுறிப்புப் பெயரெச்சம். இவை உடன்பாடு.அல்லன், இல்லன், அன்று, இன்று- என இவை முற்று. அல்லாத, இல்லாத எனஇவை பெயரெச்சம். அன்றி, இன்றி, அல்லாமல், இல்லாமல் – என இவைவினையெச்சம். இவை முறையே எதிர்மறைமுற்றும், எதிர்மறைப் பெயரெச்ச வினையெச்சங்களுமாகிய குறிப்புவினைப் பகுபதங்கள். (நன். 132 இராமா.)