நடந்தான் என்புழி வினைப் பகுதி நட என்பது. நடத்தினான் என்புழிவினைப்பகுதி நடத்து என்பது. உண்பித்தான் என்புழி வினைப்பகுதி உண்பிஎன்பது. எழுந்திருந்தான் என்புழி வினைப்பகுதி எழுந்திரு என்பது.இவ்வாறு சொல்லமைப்பிற்கேற்ப, வினைப்பகுதியை (விகுதி முதலியஉறுப்பொடு கூட)க் கொள்ள வேண்டும். வினைப் பகுதி சொல்லாகுமிடத்துத்திரிந்து விகாரப்படுதலுண்டு.எ-டு : வா – வந்தான்; தொடு – தொட்டான்; கொணா – கொணர்ந்தான்,(நன். 139)