வினைப்பகுதிகள் தொழிற்பெயர் ஆமாறு

ஆசிரியர் தொல்காப்பியனார் வினைப்பகுதிகளைப் பெயர் என்கிறார்.தொழிற்பெயராவன முதனிலைத்தொழிற்பெயர் களேயாம். தொல். கூறும்தொழிற்பெயர்கள் எல்லாம் முதனிலைத்தொழிற்பெயர்களையே சுட்டும். தும் -செம் – திரும் – என்பன போன்ற தொழிற்பெயர்களே அவரால் குறிப்பிடப்படுவன.நாட்டம்-ஆட்டம் – என்பனவற்றை மகர ஈற்றுத் தொழிற்பெயராகக் கொள்ளின்,தும் – செம் – என்பவை, தும்மல் – செம்மல் – என வழங்குதலின் அவற்றைலகரஈற்றுத் தொழிற்பெயராகக்கொள்ள நேரிடும். முதனிலைத்தொழிற் பெயர்களொடுவிகுதி பெற்ற தொழிற்பெயர்களையும் கோடல் ஆசிரியர் கருத்தன்று.வினைப்பகுதிகளைத் தொழிற் பெயர் என்னும் தொல்காப்பியனார் அங்ஙனம்பகுதியாதற்கு ஏலாத விகுதி பெற்ற தொழிற்பெயர்களை வினைப்பகுதியாகக்கொள்ள வில்லை; கொள்ளவும் இயலாது. (எ. ஆ. பக். 155)