வினைத்தொகை முதலிய ஐந்தும் விரிந்தவழி, வினைத்தொகை பெயரெச்சமாயும்,பண்புத்தொகை இரண்டும் பெயரெச்சக் குறிப்பாயும், உவமைத்தொகை இரண்டாம்வேற்றுமையொடு பயனிலையாயும், உம்மைத்தொகை இடைச்சொற் சந்தியாயும்,அன்மொழித்தொகை சொற்களும் சந்திகளும் பலவாயும் விரியும்.எ-டு : கொல்யானை : கொன்ற யானை – எனவும், கருங் குதிரை :கரிதாகிய குதிரை – எனவும், ஆயன்சாத்தன்: ஆயனாகிய சாத்தன்- எனவும்,பொற்சுணங்கு : பொன்னைப் போன்ற சுணங்கு – எனவும், இராப் பகல்: இரவும்பகலும் – எனவும், பொற்றொடி : பொன்னாலாகிய தொடியினை யுடையாள் – எனவும்விரியும். (நன். 152 சங்கர.)