வினைத்தொகை, பண்புத்தொகை, அன்மொழித்தொகை – என்பனவற்றை அல்வழிச்சந்தியாக எடுத்தோதாராயினார். என்னையெனில், வினைத்தொகையும்பண்புத்தொகையும் அல்வழிப் பொருள ஆயினும், விரித்தவழி, முறையே முக்காலம் உணர்த்தும் தன்மையவாயும் ஐம்பாலும் உணர்த்தும் தன்மையவாயும்நிற்கும் தத்தம் தொகைப்பொருள் சிதைதலின் பிரிக்கப்படாமையால் பிரிவுஇல் ஒட்டுக்களாம் ஆதலின், ஈண்டு நிலைமொழி வருமொழி செய்துபிரிக்கப்படாது ‘மருவின் பாத்தி’யவாய்க் கொல்யானை அரிவாள் ஆடரங்குசெல்செலவு புணர்பொழுது செய்குன்று- எனவும், கருங் குதிரை நெடுங்கோல்பாசிலை பைங்கண் சேதா – எனவும் வருவன போல்வன முடிந்தாங்கு முடியும்ஆகலானும், அன்மொழித் தொகையானது வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைநிலைக்களங்களிலும் பிறந்து, பொற்றொடி பவளவாய் திரிதாடி வெள்ளாடைதகரஞாழல் – என ஒரு சொல் நீர்மைத்தாய்ப் பெயர்த்தன்மை எய்தி, ‘பொற்றொடிதந்த புனைமடல்’ எனப் பயனிலையொடு புணர்ந்துழி எழுவா யாயும்,‘சுடர்த்தொடி கேளாய் (கலி. 51) என முடிக்கும் சொல்லொடு புணர்ந்துழிவிளியாயும் அல்வழிப் புணர்ச்சி யாதலும், தகரஞாழல்பூசினாள் – தகரஞாழலைப்பூசினாள் – என வேற்றுமையுருபு தொக்கும் விரிந்தும் முடிக்கும்சொல்லொடு புணர்ந்துழி வேற்றுமைப் புணர்ச்சியாதலும் உடைய ஆகலானும்ஓதாராயினார் என்க.(எச்சத்தை முற்றினைச் சாரக் கூறாத முறையல கூற்றினானே,) வட்டப் பலகை- சாரைப்பாம்பு – என்பனபோலும் இரு பெய ரொட்டுப் பண்புத்தொகைகள்அல்வழிப் பொருளவாய்ப் புணர்ச்சி எய்தல் கொள்க. (இ. வி. 54 உரை)