வினா இடைச்சொற்கள்

எ யா – என்பன மொழி முதலிலும், ஆ ஓ – என்பன மொழி யீற்றிலும், ஏ-மொழி முதல் ஈறு என ஈரிடத்தும் வினாப் பொருளை உணர்த்தி வரும். மொழிமுதல்வினா மொழி யொடு பிரிக்கமுடியாத தொடர்புடையது; ஈற்றுவினாமொழிக்குச் சிதைவின்றிப் பிரிக்கப்படும் நிலையது.வருமாறு : எவன், யாவன், ஏவன்; அவனா, அவனோ, அவனே. மொழிக்குஉறுப்பாக வரும் வினா இடைச்சொல்லை அகவினா என்றும், மொழி யின்புறத்ததாய்த் தன்னை வேறு பிரித்துழியும் நின்ற சொல் பொருள் தருவதாய்வரும் வினா இடைச்சொல்லைப் புறவினா என்றும் கூறுப.எ-டு : எ வன் – அகவினா; எ க்குதிரை – புறவினா (நன். 67)