எழுத்துவகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று;ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய் யாவது ஓரடிக்கு 23 எழுத்து வரப்பாடும் பாடற்கண் இது காணப்படும். ‘விக்கிருதி’ என்றலும் அமையும். (வீ.சோ. 139 உரை)எ-டு : ‘வன்போர்புரி வெங்கணை யங்கர்பிரான் //மறனாலுயர் பேரற னார்குமரன் // தன்போலவி ளங்கின னாதலினென் //தனுவுங்குனி யாதுச ரங்கள்செலா // அன்போடிய துள்ளமெ னக்கினிமேல் //அவனோடமர் செய்தலு மிங்கரிதால் // வென்போகுவ னென்றலு மேயிறைவன்//விசையோடிர தத்தினை மீளவிடா’ (வில்லி. 17ஆம் போர்ச். 204)