இரண்டு குருவும் இரண்டு லகுவுமாய் முறையானே வரினும், இரண்டுஇலகுவும் இரண்டு குருவுமாய் முறையானே வரினும் விதானம் எனப்படும்.எ-டு : ‘துங்கக் கனகச் சோதி வளாகத் (துங், கக்; க, ன, கச்; சோ,திவ; ளா, கத்;)தங்கப் பெருநூல் ஆதியை ஆளும்செங்கட் சினவேள் சேவடி சேர்வார்தங்கட் கமரும் தண்கடல் நாடே’இப்பாடல், இரண்டு குருவும் இரண்டு இலகுவுமாய் முறையானே வந்தது.‘பொருளாளிற் புகழாமென் (பொ, ரு; ளா, ளிற்; பு, க; ழா,மென்)றருளாளர்க் குரையாயுந்திருமார்பிற் சினனேயொன்றருளாய்நின் அடியேற்கே’இப்பாடல், இரண்டு இலகுவும் இரண்டு குருவுமாய் முறை யானே வந்தது.இவ்வாறு கூறுதல் வடநூல்வழித் தமிழா சிரியர் ஒரு சாரார் கருத்து. (யா.வி. பக். 524)விதானம் – ஒரு பண் (யாழ். அக.)