குடி’ என்று முடியும் கோயில் தலமாக விளங்கும் ஊர்ப் பெயர் வரிசையில் விடைவாய்க் குடியும் அமைகிறது. நாவுக்கரசர், விற்குடி வேள்விக் குடி நல்வேட்டக் குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி (285-3) என இதனைக் குறிப்பிட்டுச் செல்கின்றார் இப்பாடல் அடிகளினின்றும், பெயர். அது சிவன் கோயில் பெற்ற நிலை இரண்டை மட்டுமே நம்மால் புரிந்து கொள்ள இயலுகிறது. எனினும் பெயர் பற்றிய ஆய்வு மேலும் சில எண்ணங்களைத் தருகின்றது. விடைவாய் என்பதற்குப் பொருள் பொருத்தமாக இல்லை. விடையாயம் என்பதற்கு ஏற்றையுடைய ஆ என, தமிழ் லெக்ஸிகன் பொருள் அமைக்கிறது (தமிழ் லெக்ஸிகன் vol pa. I பக் -3663). தவிர, திருவிடைவாய் தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஓர் ஊர் ; அவ்வூருள் உள்ளதொரு சிவன் கோயில், அங்குள்ள கற்சுவர்களில் பதிகப் பாடல்க போன்றவற்றைத் தம் கட்டுரை ஒன்றில் விளக்கி எழுதுகின்றார் திரு. மா.வே. நெல்லையப்ப பிள்ளை இடைவாய் என்ற ஊர் பற்றி பிறர் பதிகங்கள் கிடைக்கவில்லை. எனினும் நாவுக்கரசரால் குறிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தலம் அன்று சிறப்பு பெற்று விளங்கியிருக்க வேண்டும் என்பதை ஊகிக்க இயலுகின்றது. எனவே இன்று இடைவாய் அழைக்கப்படுகின்ற ஊர் அன்று. விடைவாய்க் குடி என்ற பெயரில் இருந்ததா ? என்ற எண்ணம் எழுகின்றது. மேலும் தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்களில் ஆசிரியர் திருவிடை வாயில் என்ற ஊர்ப்பெயர் பற்றி எழுதும் போது, விடையவன் என்னும் சூரிய குலத்து மன்னன் உண் பண்ணிய ஊராதலின் பெற்ற பெயர் என்ப என்று கூறி, திரு விடைவாய் எனவும் வழங்கப்படும் என்கின்றார் (பக்.211). எனவே இவண் முன்னைய பெயரின் சார்பினைக் காண்கின்றோம். என்று இதனன நோக்க, இடைவாய்க்குடி என்ற பெயர், ஆநிரைகளின் நிறைவு காரணமாக, ஆயர்கள் நிறைந்த ஊராக இருந்து திரு சேர்ந்து, திருவிடைவாய்க் குடி என்றாகி, பின்னர் இடைவாய் என்ற பெயர் அடைந்து,இன்று திருவிடைவாயில் என்று வழங்கப்படுகின்றதோ என்பதே இப்பெயர் வரலாறு நமக்குத் தரும் எண்ணமாகும்.