விஞ்சை

விஞ்சை என இலக்கியத்தில்‌ கூறப்‌ பெறும்‌ இது விஞ்சை மாநகரமாகும்‌, அதாவது வித்தியாதரநகரமாகிய காஞ்சனபுரம்‌,
“வடதிசை விஞ்சை மாநகர்த்‌ தோன்றித்‌
தென்றிசைப்‌ பொதியிலோர்‌ சிற்றியாற்றடைகரை
மாதவன் றன்னால்‌ வல்வினை யுருப்பச்‌
சாபம்‌ பட்டுத்‌ தனித்துயருறூஉம்‌
வீவில்‌ வெம்பசி வேட்கையொடு திரிதருங்‌
காயசண்டிகை யெனுங்காரிகை“ (மணிமே, 15;81 86)