விசை என்ற மரப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் சே என்றமரப்பெயர் போல, வருமொழி வன்கணம் வரின், இடையே இனமெல்லெழுத்து மிக்குப்புணரும். எ-டு : விசை ங் கோடு, விசை ஞ் செதிள், விசை ந் தோல், விசை ம் பூ.அல்வழிப் புணர்ச்சிக்கண் நாற்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு: விசை கடிது, நெடிது, வலிது, அணித்து (தொ. எ. 282 நச்.)