விசுவாமித்திரன்

புரூரவன் மூன்றாம் புத்திரனாகிய அமவச வமிசத்துதித்த காதி புத்திரர். இவர் ஜாதியில் டித்திரியர். தமது தபோபலத்தால் பிராமணனாயினார். தம்மைப் பிராமணனாக அங்கீகாரஞ் செய்யாத வசிஷ்டர் மீது கோபமுடையராகி அவருடைய புத்திரர் நூற்றுவரையும் மாள்வித்தார். அதனாலும வசிஷ்டர் சலிக்காதிருந்தனர். திரிசங்குவுக்கு அந்தரசுவர்க்கம் அளித்தவரும் அரிச்சந்திரனைக் கொடியபரீக்ஷையால் சத்திய விரதன் என்னும் பெயரோடு விளக்கச் செய்தவரும் சகுந்தலைக்குத் தந்தையம் இவரே