இது பகுபதத்தின் இடைநிலை விகுதி ஆகியவற்றைக் குறிக்கும் வடசொல்.படர்க்கை வினைமுற்றுக்களில் திணை பால் எண் இடங்களை விகுதி காட்டும்;தன்மை முன்னிலை வினை முற்றுக்களில் ஒருமைப்பால், பன்மைப்பால், இடம் -இவற் றையே விகுதி காட்டும். ஏனைய எச்சவினைகள் இருதிணை ஐம்பால்மூவிடங்களுக்கும் பொதுவான விகுதியை ஏற்று வரும். நடவாய் – உண்ணாய் -என்பவற்றில் விகுதிகுன்றி நட – வா – என வருதலுமுண்டு. இவையன்றித்தொழிற் பெயர் விகுதிகள், பகுதிப்பொருள் விகுதி, ஒருதலை என்னும்பொருட்கண் வரும்விகுதி, (விடு, ஒழி), தற்பொருட்டுப் பொருட்கண் வரும்விகுதி (கொள்) – முதலியன உளவேனும், அவை வினைமுற்று விகுதிகளைப் போலச்சிறவா. (சூ. வி. பக். 41)