விகற்ப நடை (2)

இதனைச் சித்திர கவி வகைகளுள் ஒன்றாகக் கூறுவர். ‘வேறுபட்டநடையுடைத்தாவது’ என வீரசோழிய உரை கூறும் (181)எ-டு : ‘தமர நூபுர ஆதார சரணீ ஆரணா காரிதருண வாள்நிலா வீசு சடில மோலி மாகாளிஅமரர் வாழ்வு வாழ்வாக அவுணர் வாழ்வு பாழாகஅருளு மோகினீ யாகி அமுதபானம் ஈவாளே’ (தக்க. 107)இதன்கண், முதலடி பெரும்பாலும் வடமொழிச் சொற்கள் அச்சந்திகளோடு புணர(நூபுராதார’ என்பது பிரித்துக் காட்டப்பட்டுள்ளது), அடுத்தஅடி தமிழ்நடையால் அமைந்தவாறு. இதுவும் வேறுநடைத்து ஆதல் கூடும்.யாப்பருங்கல விருத்தியில், விகற்ப நடை என்பது ‘வினாவுத் தரம்’ என்றமிறைக்கவிக்கு அடையாக ‘விகற்ப நடைய வினாவுத்தரமே’ என்று வினாவியதற்குஒரு மொழியும் தொடர்மொழியுமாக விடையிறுப்பது என்று விளக்கம்கூறப்பட்டுள்ளது. (பக். 545)