‘வினாவிற்கு விடையிறுக்கும்போது இருபொருள்படும் வகையில்இருவகையாகப் பிரித்துப் பொருள் கொள்ளுமாறு தொடர்மொழியில்விடையிறுத்தல் முதலியன. வழக்காற்றில் விடையிறுக்கும்போது தெளிவு படவிடையிறுக்காமல், ‘இவ்வாறு இரட்டுற மொழிதலாக அமைத்தல் வேறுபட்டநடையுடைத்து ஆதலின் விகற்ப நடை எனப்பட்டது. (வீ. சோ. 181 உரை)எ-டு : தன்னையும் உடன் கொண்டு செல்லுமாறு வேண்டிய தாய்கோசலைக்கு மறுமொழி கூறும் இராமன்,‘சித்தம் நீதி கைக்கின்றதென்?’ என்ற கூற்றில், ‘சித்தம் நீதிகைக்கின்றது என்’ (நீ எதற்காக மனம் தடுமாறுவது? எனவும், ‘சித்தம்நீதி கைக்கின்றது என்?’ (நின் உள்ளம் நீதியை வெறுப்பது எதற்கு?)எனவும் இருபொருள்பட விகற்ப நடைவந்தவாறு. (கம்பரா. 1626)