இன்று வாளொளிப் புத்தூர் என, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். விஜயனுடைய கைவாளை, சுவாமி புற்றில் ஒளித்து வைத்தார். அதனால் வாள் ஒளி புற்றூர் என்றும் பெயர் வந்தது என்ற எண்ணம் அமைகிறது. புத்தூர் இதன் முதற்பெயராக அமைய, பின்னர், இறைத் தொடர்பாக வாழ்கொளி என்ற அடை இணைந்திருக்கலாம். அல்லது, கோயில் செல்வாக்கால் உருவாகிய புதிய ஊர் என்ற நிலையில் முழுப்பெயரும் தோற்றம் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சம்பந்தர், சுந்தரர் பாடல்கள், இத்தலம் குறித்து அமைகின்றன. மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளி புத்தூர் என்கின்றார் சுந்தரர் (57).