வாழிய என்னும் அகர ஈற்று வியங்கோள் வினைமுற்றுச் சொல் ‘வாழும்காலம் நெடுங்காலம் ஆகுக’ என்னும் பொருளதாய், வன்கணம் வரினும்இயல்பாகப் புணரும். அஃது ஈறுகெட்டு வாழி என்று ஆகியவழியும்நாற்கணத்தோடும் இயல்பாகப் புணரும்.எ-டு : வாழிய கொற்றா, நாகா, மாடா, வளவா, யவனா, அரசே; வாழிகொற்றா, நாகா, மாடா, வளவா, யவனா, அரசே (தொ. எ. 211 நச்.)வாழிய என்பது வாழும் பொருட்டு என்ற பொருளில் செய்யிய என்னும்வாய்பாட்டு வினையெச்சமாயின், ஈறு கெடாது நாற்கணத்தோடும் இயல்பாகப்புணரும்.எ-டு : வாழிய சென்றான், நடந்தான், வந்தான், அடைந்தான். (தொ. எ.210)வாழிய என்னும் சேய் என் கிளவி – சேய்மையிலுள்ள வாழுங் காலத்தைஉணர்த்தும் சொல். (எ.கு.பக். 203)வாழிய என்று சொல்லப்படுகின்ற, அவ்வாழுங்காலம் அண்மைய அன்றிச்சேய்மைய என்றுணர்த்தும் சொல். அது ஏவல் கண்ணாத வியங்கோள். (212 இள.உரை)வாழிய என்பது வாழ்த்தப்படும் பொருள் வாழவேண்டும் என்னும்கருத்தினனாகக் கூறுதலின் அஃது ஏவல் கண் ணிற்றே யாம். (211 நச்.உரை)