‘வாழிய என்னும் செய்கென் கிளவி’

வாழிய என்று கூறப்படும் செய்க என்னும் வாய்பாட்டு வியங்கோட் கிளவி.இதன் இறுதி நிற்கும் யகர உயிர்மெய் வருமொழி நாற்கணம் வரினும்கெடுதலும் உரித்தாகும்; உம்மையான் கெடாது நிற்றலும் ஆம்.வருமாறு : வாழிய + கொற்றா, சாத்தா, தேவா, பூதா; நாகா, மாடா;வளவா; அழகாஇவை வாழி கொற்றா… வாழியழகா – என இறுதி யகரம் கெட்டும், வாழியகொற்றா… வாழிய வழகா- என இயல்பாயும் முடிந்தவாறு.‘செய என்கிளவி’ என்ற பாடம் ஏடெழுதுவோரால் நேர்ந்தது.(தொ. எ. 211 ச. பால.)