வாழிய என்பதனைச் செய்யியவென் கிளவியாகக் கொண்டு, வாழிய கொண்டான் -வாழி கொண்டான் – என்று உதாரணம் காட்டுதல் வேண்டும் என்பது. (எ.ஆ. பக்.135)‘வாழிய என்னும் செய்யிய கிளவி’ என்ற பாடம் இருந்திருக் கலாம். (எ.ஆ. பக். 135)நச்சினார்க்கினியத்தில் ‘வாழிய என்னும் செயவென் கிளவி’ என்றபாடமும், ‘வாழுங்காலம் நெடுங்காலம் ஆகுக!’ என்னும் பொருளைத் தரும்வாழிய என்று சொல்லப்படும் செயவென் எச்சக்கிளவி – என்ற உரையும்உள்ளன.வாழிய கொற்றா – என்று உதாரணம் பிழையாகத் தரப் பட்டுள்ளது. வாழியகொண்டான், வாழி கொண்டான், என்றாற் போல உதாரணம் இருத்திருத்தல்வேண்டும்.‘வாழிய என்னும் சேயென் கிளவி’ என்பது இளம்பூரணர் பாடம். அதுவே நச்.கொண்ட பாடமாகவும் இருந்திருக்க லாம். ‘செயவென் கிளவி’ என்பதுமூலத்திலும் உரையிலும் பிழைபட எழுதப்பட்டிருக்கலாம். (எ. ஆ. பக்.135)