வடமொழியிலே ராமாயணஞ் செய்த வித்துவசிரேஷ்டர். இவர் ஜாதியிலே பிராமணராகியும், கிராதர்தொழிலை மேற்கொண்டு காட்டிலேயிருந்து வழிப்போக்கர்களை அலைத்து அவர்கள் பொருளைக் கவர்ந்தொழுகும் நாளில் நாரதர் கண்டு ஞானோபதேசம் பண்ணி அவரை நல்வழிப்படுத்தினர். அதன்பின்னர் மகாதவசிரேஷ்டராகி ராமாயணத்தை இயற்றி முடித்தார். சீதையை ராமர் காட்டுக்கனுப்பியபோது இவ்விருஷியே அச்சீதையையம் குசலவர்கள் என்னும் புத்திரரையும் ஆதரித்தவர். இவர் வருணன் மகனார் என்றுங் கூறப்படுவர். அதுகாரணமாகப் பிராசேதசர் எனவும் படுவர், பிரதேசஸ் ~ வருணன், அவன் புத்திரர்