வாறன் விளை

மலை நாட்டுத் தலம். திருமால் கோயில் சிறப்பு பெற்றது. எர்ணா குளம், கொல்லம் தென்னிந்திய இருப்புப்பாதையில் உள்ள செங்கன்னூர் நிலையத்தில் இறங்கி, ஏழுமைய பேருந்தில் சென்று இவ்வூரை அடைதல் வேண்டும் என்கின் எண்ணம், இவ்வூர் இருக்குமிடத்தைத் தருகிறது. மக்கள் வழக்கில் ஆரன் முளை (முளா) என்று அமைகிறது. நம்மாழ்வார் பாடல்கள், இத்தலத்து இறைவனையும், இவ்விடத்தின் செழிப்பு பற்றிய எண் ணங்களையும் அளிக்கின்றன.
மாகம் திகள் கொடி மாடங்கள் நீடும் மதிள் திருவாறன் விளை (நாலா -2844)
பாடும் பெரும் புகழ் மறை வேள்வியைத் தா றங்கம் பண்ணினர் வாழ்
நீடு பொழில் திருவாறன் விளை (2845)
வாய்க்கும் கரும்பும் பெருஞ் செந்நெல்லும் வயல்
சூழ் திருவாறன் விளை (2846)
என்ற எண்ணங்கள், இங்கு மக்கள் வாழ்ந்த செய்தியையும் தருகின்றன.