வாரணம்

மாவிலிங்கம்‌ என்னும்‌ ஒருவகை மரத்தை வாரணம்‌ என்னும்‌ சொல்‌ குறிப்பதால்‌ தாவரத்தால்‌ வாரணம்‌ என்ற ஊர்‌ பெயா்‌ பெற்றதோ என எண்ண இடமளிக்கிறது. (வாரணம்‌ கோழி என்ற உறையூரைக்‌ குறிக்கும்‌ என்பதை “தென்றிசை மருங்‌ற்‌ செலவு விருப்புற்று, வைகறையாமத்து வாரணங்கழிந்து” (சிலப்‌.11:10 11) முன்னரே கண்டோம்‌) வாரணாசி என்றும்‌ வாரணவாசி என்றும்‌ இலக்கியத்தில்‌ கூறப்‌ பெறும்‌ வாரணம்‌ என்னும்‌ இவ்வூர்‌ மத்திம நன்னாட்டைச்‌ சார்ந்தது.
“மத்திம நன்னாட்டு வாரணந்‌ தன்னுள்‌”? (சிலப்‌. 15;178)
“வாரணாசி யோர்‌ மறை யோம்‌ பாள
னாரண வுவாத்தி யபஞ்சிகனென்‌ போன்‌” (மணிமே.13 : 344)
“தீண்டற்‌ காகாத்‌ திருந்துமதிலணிந்த
வாரணவாசி வளந்தந்தோம்பும்‌” (பெருங்‌, 3:17: 12 13)