இன்று திருவாய்மூர் என, தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் இடம் இது. காவிரியின் தென்கரைத் தலம் என்ற குறிப் பினைத் தவிர, பிற எண்ணங்கள் தெளிவு றவில்லை. அப்பர். சம்பந்தர் இத்தலத்து இறைவனைக் கண்டுப் பாடியுள்ளனர். பத்துப் பாடல்களில் வாய்மூர் இறைவன் சிறப்பினைக் கூறும் சம்பந்தர், இறுதிப்பாடலில்,
திங்களொடருவரைப் பொழிற் சோலைத்
தேனலங் காலைத் திருவாய்மூர் (247-11) எனத் திருவாய்
மூரின் இயற்கை நலம் போற்றுகிறார். அப்பர்,
எங்கே என்னை யிருந்திடந் தேடிக் கொண்
டங்கே வந்தடையாள மருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனார் அதென் கொலோ (164-1) என்று பாடுகின்றார்.