வான்மியூர்

திருவான் மியூர் என்று இன்று வழங்கப்படும் இத்தலம் இன்று சென்னை மாவட்டத்தில் உள்ளது. வான்மீக முனிவர் வழிப்பட்டதால் இப்பெயர் என்ற எண்ணம் அமைகிறது கடற்கரைத் தலம் என்பதைச் சம்பந்தரும் தம் பாடலில் குறிக்கின்றார்.
கரையுலாங் கடலிற் பொலி சங்கம். வெள்ளிப் பிவள்
திரையுலாங் கழி மீன் உகளுந்திருவான்மியூர் (140-1)
கானயங்கிய தண் கழி சூழ் கடலின் புறம்
தேனயங்கிய பைம் பொழில் சூழ் திருவான்மியூர் (140-3)