தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள இவ்விடம் ஐயர் மலை என்று சுட்டப்படுகிறது. இரத்தினகிரி, மாணிக்க மலை சிவாய மலை என்பன வேறு பெயர்கள். மலைமேல் கோயில் உள்ளது என்ற எண்ணமும், அப்பர் பாடல் பெற்ற தலம் குறித்த எண்ணமும், (பதி-200) வாட்போக்கி என்பது இறையுடன் தொடர்பு கொண்ட நிலையில் அமைந்த பெயராக இருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருகிறது.