திருவாஞ்சியம் என, தஞ்சாவூரில் உள்ள ஊர் இது. இங்குள்ள சிவன் கோயில் சிறந்த செல்வாக்குடன் அன்று திகழ்ந்திருக்கிறது என்பதனைச். சைவர் பலராலும் போற்றப்பட்ட தன்மை தெரிவிக்கிறது. விரும்பத்தக்க ஊர் என்ற அடிப்படையில் இப் பெயர் பெற்றதா என்பது எண்ணமாக அமைகிறது. புத்தாறு என்னும் ஆற்றின் கரையில் உள்ள தலம்
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
என, மாணிக்கவாசகர் பாடுகின்றார் (கீர்த் – அ -79-80).
தீர்த்த மாமலர்ப் பொய்கைத் திகழ் திருவாஞ்சியம் (76-63)
திருந்து மாட டங்கணீடு திகழ் திருவாஞ்சியம் (76-6)
அருவிபாய் தரு கழனி யலர் தரு குவளையங் கண்ணார்
குருவியாய் கிளிசேர்ப்பக் சருகின மிரிதரு கிடங்கில்
பருவரால் குதி கொள்ளும் பைம்பொழில் வாஞ்சியத்துறையும்
இருவரால் அறியொண்ணா விறைவன தறைகழல் சரணே (766-7)
எனச், சுந்தரர் இயற்கையழகையும். இறையின்பத்தையும் ஒரு சேரத் தருகிறார். இந்த இயற்கைச் செழிப்பை, இவ்விடத்தினை மக்கள் விரும்பியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தரும் நிலையில் இக்காரணம் பொருத்தமாகிறது.