மரப்பெயர்கள் போன்ற தாவரங்களின் பெயரால் ஊர்கள் பெயர்பெறும் மழையையொட்டி வாகை என்ற ஒருவகை மரத்தின் பெயர் ஓர் ஊருக்குப் பெயராய் அமைந்தது போலும். தனிமரங்களின் பெயர்களையே தம் பெயர்களாகக் கொண்ட ஊர்ப்பெயர்களில் வாகை என்ற ஊர்ப்பெயர் ஒன்று. வாகையென்னும் ஊரில் போர்க்களத்தில் கரிகாலனுடன் போர் புரிந்த பகைவர்கள் தோற்று ஓடினர் என்று சங்க இலக்கியச் செய்தி ஒன்று கூறுகிறது. வடஆர்க்காட்டில் வாகை என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது. பன
“கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை” (குறுந். 393; 3 6)
“வெருவருதானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகான் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடுபெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடுஇல் மன்னர் போல,” (அகம். 125 : 19 20)
“படுமணி மருங்கன் பணைத்தாள் யானையும்,
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும்,
படையமை மறவரொடு, துவன்றிக் கல்லென,
கடல் கண்டன்ன கண் அகல் தானை
வென்றெறறி முரசின் வேந்தர் என்றும்
வண்கை எயினன் வாகை யன்ன” (புறம். 351: 1 9)