வள் : புணருமாறு

வள் என்ற பெயர் தொழிற்பெயர் போல இருவழிக்கண்ணும் வன்கணம் வந்துழிஉகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும்வந்துழி உகரம் பெற்றும், யகரம் வருவழி இயல்பாயும், உயிர் வருவழி ளகரஒற்று இரட்டியும் புணரும்.எ-டு : வள்ளுக் கடிது;வள்ளு ஞான்றது, வள்ளு வலிது; வள் யாது,வள் ளரிது – அல்வழி. வள்ளுக்கடுமை; வள்ளுஞாற்சி, வள்ளுவலிமை;வள்யாப்பு, வள் ளருமை – வேற்றுமை.சிறுபான்மை இருவழியும் வன்கணம் வருவழி ளகரம் டகரமாகி வட்கடிது,வட்கடுமை- என வருதலும், மென்கணம் வரின் ளகரம் ணகரமாகத் திரிந்து வண்ஞான்றது, வண் ஞாற்சி – என வருதலும், இடையினத்து வகரத்தின் முன் வள்வலிது, வள்ளு வலிது – என உகரம் பெறாதும் பெற்றும் வருதலும்கொள்ளப்படும். (தொ. எ. 403 நச். உரை)