வள்ளலார் பாடல் யாப்பு

இராமலிங்க அடிகளார் அருளிய ஆறு திருமுறைப் பாடல்கள் எண்ணிக்கை5818; பலவகைத் தனிப்பாடல்களின் எண்ணிக்கை 152. வள்ளலாரது ‘அருட்பெருஞ்சோதி அகவல்’ 1596 அடிகளாலியன்ற நிலை மண்டில ஆசிரியம்;இவ்விரண்டடியெதுகையாக இகர ஈற்றால் (ஜோதி என) அமைவது.‘திருவடிப் புகழ்ச்சி’ என்ற ஆசிரிய விருத்தம் 192 சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். வள்ளலார் தாண்டவராயத் தம்பிரானார்க்குவரைந்த ‘திருமுகப் பாசுரம்’ 102 சீர்க்கழி நெடிலடிஆசிரியவிருத்தம்.பிரசாதப் பதிகம் தரிசனப் பதிகம் போன்ற பதிக அமைப்புக் களும்,குறையிரந்த பத்து, முறையிட்ட பத்துப் போன்ற பத்துப்பாடல்அமைப்புக்களும் முறையே தேவார திருவாசக மரபுகளைப் பின்பற்றியன. ஒருபொருள் பற்றிப் பல பாடல்கள் எழும் ‘மாலை’களால் ஐந்தாம் திருமுறைஅமைந்துள்ளது.தேவ ஆசிரியம், போற்றித் திருவிருத்தம், நெஞ்சுறுத்த திருநேரிசைமுதலாக அமைந்தவை யாப்பின் பெயரால் எழுந்தவை.அருட்பாவில் நிகழும் உள்ளப் பஞ்சகம், நாரையும் கிளியும் நாட்டுறுதூது, ஞானசிகாமணி திருச்சீர் அட்டகம் முதலி யன பிரபந்தங்களை யொட்டிஎழுந்தவை; நடேசர் கொம்மி, சல்லாப லகரி என்பன நாட்டுப் புறஇலக்கியங்களை நினைவூட்டுவன. கண்ணி, தாழிசை, சிந்து, கீர்த்தனை என்றவடிவு கொண்டு இசைக்கப்படும் பாடல்கள் பல உள; பண் வகுப்புப் பெறுவனவும்உள.வருக்கமாலை வருக்கக் கோவைப் பிரபந்தங்களையொட்டி, பாங்கிமார் கண்ணிஅமைகிறது.திருவருட்பாவில் குறள் வெண்பா 3, குறள் வெண் செந்துறை 3,குறட்டாழிசை 1, நேரிசை வெண்பா 306, வெண்டுறை 1, நிலைமண்டில ஆசிரியப்பா3, ஆசிரியத்துறை 5, அறுசீர் விருத்தம் 1034, எழுசீர் விருத்தம் 765,எண்சீர் விருத்தம் 1526, பன்னிருசீர் விருத்தம் 125, பதினான்குசீர்விருத்தம் 10, நாற்பத்தெட்டுச்சீர் விருத்தம் 1, 192 சீர் விருத்தம்1, 102 சீர்விருத்தம் 1, வண்ணவிருத்தம், 1, சந்தவிருத்தம் 8,கலிவெண்பா 2, கொச்சகக் கலிப்பா 190, கட்டளைக்கலிப்பா 15, கலித்தாழிசை31, கலித்துறை 23, கலிநிலைத்துறை 16, கலிநிலை வண்ணத்துறை 14, கட்டளைக்கலித்துறை 571, கலிவிருத்தம் 208, வண்ணக்கலிவிருத்தம் 10, வஞ்சித்துறை11, தாழிசை 191, சிந்து 748 எனப் பாவும் பாவினமும் அமைந்துள.(இலக்கணத். முன். பக். 108 – 110)