வளி:புணருமாறு

வளி என்னும் காற்றின் பெயர் அத்துச்சாரியையும் இன்சாரி யையும்பெற்றுப் புணரும்.எ-டு : வளியத்துக் கொண்டான், வளியத்து நின்றான், வளியத்துவந்தான், வளியத் தடைந்தான்; வளியிற் கொண்டான், வளியினின்றான், வளியின்வந்தான், வளியினடைந்தான்என நாற்கணத்தும் வந்தவாறு. இவை வேற்றுமைப் புணர்ச்சி;ஏழாம்வேற்றுமைத் தொகையாகக் கொள்க. (தொ. எ. 242 நச்.)